பரிசுடன் வந்த அக்கா நற்பின்னையைப் பார்த்ததும், உற்சாகமாக ஓடிச்சென்று அவள் கையிலிருந்ததை வாங்கிப் பார்க்கிறாள் வெண்பா.
வெண்பா: ஐ... என்னக்கா இது ?
நற்பின்னை: தமிழ் வகுப்பில் சொற்போட்டியில் கிடைத்த பரிசு வெண்பா.
வெண்பா: அப்படியா, என்ன விளையாட்டுன்னு சொல்லேன்.
நற்பின்னை: நேத்து வகுப்புல ‘ஓரெழுத்து ஒரு மொழி'ன்னு ஆசிரியர் ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. அதுல நடத்தின போட்டிதான். யார் நிறைய சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் சொன்னாங்களோ அவங்களுக்குத்தான் பரிசு. நான்தான் நிறைய சொன்னேன்.
வெண்பா: ஓ.. ஓரெழுத்து ஒரு மொழியா, அப்படின்னா என்ன?
நற்பின்னை: ஒரே எழுத்தா இருந்தாலும் அந்த எழுத்து தனியா நின்னு ஒரு சொல்லைப் போலவே பொருள் தரும்.
வெண்பா: அப்படியிருக்கா என்ன? எங்க அப்படி ஒரு எழுத்தைச் சொல்லேன்.
நற்பின்னை: நீயே சொன்னயே, ஐ.. வெண்பா: சொல்லுக்கா.. விளையாடாத..
நற்பின்னை: அதுதான் ஓரெழுத்து ஒரு மொழி.
வெண்பா: சரி.. 'ஐ' ன்னா என்ன, வியப்பா இருந்துச்சுன்னா, ஆச்சரியப்பட்டா சொல்றோம்.. அதுக்கு வேற பொருள்கூட இருக்கா?
நற்பின்னை: ‘ஐ' ங்கிற எழுத்துக்கு அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்புன்னு பல பொருள் இருக்கு.
வெண்பா: ஒரு எழுத்துக்கா இவ்வளவு பொருள் இருக்கு? ம்.. வேற எழுத்து இருக்கா இந்த மாதிரி..
நற்பின்னை: நிறைய இருக்கு. ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 இருக்காம். உனக்கு இதைப் போல எழுத்து ஏதாவது நினைவு இருக்கா ?
வெண்பா: எனக்கா.. கை, தை, தீ, நீ, வா, போ, பூ இந்த மாதிரித்தானே.
நற்பின்னை: பார்த்தியா, உனக்கே நிறைய தெரிஞ்சிருக்கு. சரி. நீ சொன்ன எழுத்துக் கெல்லாம் பொருள் என்னன்னு தெரியுமா ?
வெண்பா: ‘தை'ன்னா தைக்கறது, தைமாசம்.. வேற பொருள்கூட இருக்கா.
நற்பின்னை:‘கை'ங்கிற ஒரு எழுத்து உடல் உறுப்புங்கறதைத் தவிர ஒழுக்கம், சிறகு, ஒப்பனைன்னு இன்னும் பல பொருள் தரும். தைக்கறதும், மாதத்தோட பேரும் மட்டுமில்ல ‘தை'ங்கிற எழுத்து பொருத்துதல், ஒப்பனை செய்தல்னுகூடப் பொருள் தருதாம்.
வெண்பா: ‘தீ'ன்னா நெருப்புன்னுதானே பொருள்?
நற்பின்னை: கோபம், தீமை, நரகம்னு இன்னும் சில பொருள் தருது ‘தீ'ங்கிற ஓரெழுத்து. பூவுக்கு, பூமி, பிறப்புன்னு கூடப் பொருள் இருக்கு.
வெண்பா: ‘ஆ'ங்கிற எழுத்துக்கு என்ன பொருள்? நீ என் காலை மிதிச்சா ‘ஆ'ன்னு கத்துவேன். வேற என்ன?
நற்பின்னை: ‘ஆ'ன்னா நீ போடுற சத்தம் மட்டுமில்லை வெண்பா. நீ ஆச்சரியப்படுற அளவுக்குப் பொருள் இருக்கு. பசு, இரக்கம், ஆன்மா, நினைவுன்னு பல பொருள் இருக்கு.
வெண்பா: சரிக்கா. ‘கோ' ன்னா என்ன ? அந்தத் தலைப்புல ஒரு படம்கூட வந்ததே..
நற்பின்னை: ‘கோ'ங்கிற எழுத்து அரசன், தலைவன், பசு, இறைவன்னு நிறைய பொருள்கள்ல பயன்படுத்தப்பட்டிருக்கு. வேற எங்கயாவது ‘கோ' வைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறயா?
வெண்பா: ஆமாம். நான் கூட கோவில்ல பசுக்கள் கட்டியிருக்கிற இடத்துல கோசாலைன்னு எழுதியிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.
நற்பின்னை: சரி வெண்பா. நேரமாச்சு. வா, வீட்டுப் பாடத்தை முடிக்கலாம்.
- கவிதா நல்லதம்பி
(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர், தமிழ்த் துறை பேராசிரியை.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago