கடந்த அத்தியாயத்தில் ‘பனி பந்து வழி’ (Snow Ball Method) உத்தியின் மூலமாக கடனை எவ்வாறு அடைப்பது என பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அதற்கு நேர் எதிரான ’அவலாஞ்சி உத்தி’யின் (Avalanche Method ) வாயிலாக கடனை எவ்வாறு அடைப்பது என்பதை பார்ப்போம். பெரிய மலையின் உச்சியில் இருந்து ஒரு பனிப்பாறையை கீழே உருட்டிவிட்டால் என்ன ஆகும்? மலையில் இருக்கும் மரம், செடி, கொடி, கற்பாறை எல்லாவற்றையும் வாரி சுருட்டிக்கொண்டு அசுர வேகத்தில் மிக பெரிய ராட்சத பாறையாக மாறி அடிவாரத்தை வந்தடையும். இதன் பெயர் அவலாஞ்சி. அதாவது, இந்த உத்தியின் மூலம் பெரிய கடனை முதலில் அடைத்துவிட்டால் சிறிய கடனை எளிதில் அடைத்துவிட முடியும்.
வட்டி விகிதாச்சார முறைப்படி பட்டியல்: ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் இருப்பின் அவற்றை முழுவதுமாக ஒரு தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். அதில் அதிக தொகையுள்ள கடன், அதிக வட்டியுள்ள கடன், குறைந்த வட்டி கடன், நகைக்கடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய கடன், வட்டியில்லா கடன் என வகைப்படுத்திகொள்ள வேண்டும். பின்பு அவற்றை வட்டி விகிதாச்சார முறைப்படி பட்டியலிட வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு வீட்டு கடன், ஆன்லைன் செயலி கடன், கிரெடிட் கார்ட் கடன், தனிநபர் கடன், வாகன கடன், நகைக்கடன், தெரிந்தவர்களிடம் வாங்கிய கடன் ஆகிய 7 வகையான கடன்கள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இதில் எதற்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்து அதனை முதல் இடத்தில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அதற்கடுத்த நிலையில் இருக்கும் கடனை குறிப்பிட வேண்டும். இவ்வாறு வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடன் பட்டியலை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதிக வட்டி வசூலிக்கும் கடனை முதலில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அதிக வட்டி கொண்ட கடன் ஒட்டுமொத்த வருமானத்தையும் உறிஞ்சக் கூடியது. அந்த கடனை அடைக்கும் வரையில் மற்ற கடன்களுக்கு குறைந்தப்பட்ச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். பெரிய கடனை அடைத்துவிட்டால் அதன் மூலம் கிடைக்கும் உற்சாகமும் ஆற்றலும் மற்ற கடன்களை அடைக்க உத்வேகத்தை தரும்.
அமல்படுத்தும் வழி: மேலே சொல்லப்பட்ட 7 கடன்களின் ஆன்லைன் செயலி கடனுக்கு 30 சதவீதம்வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே அதனை முதல் வேலையாக கட்டிவிட வேண்டும். அடுத்தது கிரெடிட் கார்டு கடனை அடைக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு 18 சதவீதம்வரை வட்டி விதிக்கப்படுகிறது. இதேபோல தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் 12 சதவீதம், வாகன கடனுக்கு 10 சதவீதம், நகைக் கடனுக்கு 9 சதவீதம், வீட்டு மனை கடனுக்கு 8 சதவீதம் என இருப்பதால் இந்த வரிசையில் கடனை அடைக்கலாம். ஒருவேளை சிறிய கடனை முதலில் அடைக்க தொடங்கினால், அதற்குள் அதிக வட்டி கொண்ட கடன் விஸ்வரூபம் எடுத்துவிடும். அது ஒட்டுமொத்த சொத்தையும் விழுங்கி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க அவலாஞ்சி வழியில் கடனை அடைப்பதே சிறந்தது.
» மியூசிக் அகாடமி 97-ம் ஆண்டு இசை விழா நாளை தொடக்கம்: அகாடமி தலைவர் என்.முரளி தகவல்
» டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
அவலாஞ்சி வழியை வெற்றிகரமாக அமல்படுத்த, வட்டி விகிதத்தின்படி கடன் பட்டியல் மிக அவசியம். அதனை முழுமையாக திட்டமிட்டு உருவாக்க வேண்டும். பின்னர் கடனை அடைப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். அதில் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வழியையும், செலவை குறைப்பதற்கான திட்டமிடலையும் குறிப்பிடுவது முக்கியம். பட்ஜெட்டின் அதிக வட்டிக் கொண்ட கடனை அடைப்பதுடன், 6 மாதத்துக்கொரு முறை கூடுதல் தொகையை செலுத்தி காலகெடுவை குறைக்க வேண்டும். அதிக வட்டி கொண்ட பெரிய கடனை முதலில் கஷ்டப்பட்டு செலுத்திவிட்டால், அடுத்தடுத்த கடனை இன்னும் வேகத்துடன் அடைக்க முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago