அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களுக்கு நாசா அழைப்பு: தகுதியானவர்களை சந்திரனுக்கு அனுப்ப திட்டம்

By செய்திப்பிரிவு

அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை தேர்வு செய்ய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சந்திரன், சூரியன், செவ்வாய் கிரகம் உள்ளிட்ட பல கோள்களை ஆராய்வதற்காக நாசா நிறுவனம் பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. அதனுடன் மனிதர்களையும் அவ்வப்போது விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுமார் ஓராண்டாக தங்கிருந்து, ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பெண் கிறிஸ்டினா கோச் (41) சமீபத்தில் பூமிக்கு திரும்பினார்.

இந்நிலையில், அடுத்த தலைமுறைக்கு தேவையான விண்வெளி வீரர்களை தயார் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய வீரர்களை தேர்வு செய்ய நாசா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நாசா நிறுவனம் செவ்வாய்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் கூறியிருப்பதாவது:

விண்வெளித்துறையில் பல சாதனைகளை செய்து வரும் நாசாவில் தற்போது 48 விண்வெளி வீரர்கள்வேலை செய்து வருகின்றனர். அதனைஉயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொருத்தமான அமெரிக்கர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பிக்கும் நபர்கள் விண்வெளி துறைக்கு தேவையான படிப்பில் முதுகலை பட்டம் பெற்று இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் பயணம் செய்ய வேண்டும். பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி வேலை செய்ய தயாராக இருக்கவேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்)20-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்குள் முதல்பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனுக்கு அனுப்ப உள்ளோம். அதற்காக மார்ச் 2 முதல் விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானம், பொறியியல், கணிதம் ஆகிய படிப்புகளில் முதுகலைப் பட்டமோ அல்லது சோதனைபைலட்கலோ விண்வெளி வீரர்களுக்குதகுதியானவர்கள். மேலும், 2 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களுக்கான அழைப்பு அமெரிக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்