‘ஜூனியர் சிவி ராமன்' பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனாய்வு தேர்வு

By செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த சிவி ராமன் அகாடமி, ஐஐடி, பிட்சாட், எய்ம்ஸ், நீட், ஜிப்மர் உட்பட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கும் பள்ளி பொதுத்தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது.

பள்ளி மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் அறிவியல் அறிவை வெளிக்கொண்டு வரும் நோக்கிலும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்தும் வகையிலும் ஜுனியர் சிவி ராமன் - அறிவியல் திறனாய்வுத்தேர்வை (Hunt For Junior CV Raman - The Science Talent Test) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இத்தேர்வை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் எழுதலாம். 2 மணி நேரம் கொண்ட இந்த தேர்வில் 5 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அறிவுத்திறன், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்தும், 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அறிவுத்திறன், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியவற்றில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் முதல் 38 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஓராண்டு ராமன் அகாடமியில் இலவசமாக பயிற்சி பெறலாம்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நவ;24-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. தேர்வெழுத விரும்புவோர் www.cvramanschool.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவம்பர் 20-க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். சிவிராமன் அகாடமிக்கு நேரில் சென்றும் பதிவுசெய்யலாம். மொபைல் எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் அறிய 9585503447, 9585512447 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்