ஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி

By செய்திப்பிரிவு

வெற்றி மொழி

There is only one difference between Dream and Aim. Dream requires effortless sleep and Aim requires sleepless efforts. Sleep for Dreams and wake up for Aims…! - Swami Vivekananda

கனவுக்கும் குறிக்கோளுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது. கனவுக்கு தேவை சிரமமற்ற உறக்கம். குறிக்கோளுக்குத் தேவை உறக்கமற்ற உழைப்பு. கனவுகளுக்காக உறங்குங்கள், குறிக்கோளுக்காக விழித்தெழுங்கள்…! -

சுவாமி விவேகானந்தர் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலப் பொன்மொழிக்கான தமிழாக்கத்தில் உள்ள வித்தியாசத்தை கவனித்தீர்களா மாணவர்களே! பொதுவாக, ‘Effort’ என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் ‘முயற்சி’. ஆனால், இங்கு ‘சிரமம்’, ‘உழைப்பு’ ஆகியவற்றை எழுதியுள்ளோம். ஆமாம், நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொருத்து ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கம் வேறுபடும். இதைப் புரிந்துகொண்டால் ஆங்கிலம் எளிது.

அறிந்ததும் அறியாததும்

எங்கே IN எழுதலாம்?

அடிக்கடி ஏற்படும் குழப்பங்களில் எங்கே in, on, at எழுதுவது என்பது. பெரும்பாலான நேரம் சா...பூ...த்ரீ சொல்லிப் பார்த்து 3-ல் ஒன்றை எழுதுவிடுவோம். இனி மேல் துல்லியமாக அறிந்துகொண்டு எழுதலாம் வாங்க! முதலில் எங்கே in எழுதலாம் என்பதைப் பார்ப்போம்.

ஒன்றால் சூழ்ந்திருக்கும்போது in எழுத வேண்டும். உதாரணத்துக்கு, Right now, I am in my room. Room – அறை எனும்போது நான்குச் சுவர்கள், கூரை, தரை ஆகியவை சூழ்ந்திருக்கின்றன..

இது ஊர், நாடு ஆகியவற்றுக்கும் பொருந்தும். நீங்கள் இருக்கும் அறையை விட்டு வெளியே வந்து எந்த ஊருக்குள், நாட்டுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பார்த்துச் சொல்லுங்கள்.

I am in India. I am in Chennai.
இதேபோல் நீங்கள் எதனால் சூழப்பட்டிருந்தாலும் அங்கு in என்று எழுதுவதே பொருத்தமானது.
இதோ மேலும் சில உதாரணங்கள்:
You can find the answer in the book. - நீங்கள் தேடும் விடை புத்தகத்துக்குள் இருப்பதால் இப்படிச் சொல்கிறோம்.
He looks so cute in the picture. - அவன் புகைப்படத்தில் இருப்பதால் இப்படிச் சொல்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

மேலும்