திருப்பூர் | பெண் கல்வியின் முக்கியத்துவம் மாநகராட்சி பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் பொம்மலாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மைய (சிஎஸ்இடி) செயல் இயக்குநர் நம்பி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நித்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியை ரத்தினம் வரவேற்றார். நிறைவாக, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

பொம்மலாட்டம் குறித்து மாணவி கள் கூறும்போது, ‘‘பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பொம்மலாட்டம் மூலம் அறிந்து கொண்டோம். நேர்த்தியான கலையாக பொம்மலாட்டக் கலை இருப்பதை அறிந்தோம்.

திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
பொம்மலாட்ட நிகழ்வை உற்சாகத்தோடு கண்டுகளிக்கும் மாணவிகள்.

எந்த சூழலிலும் பெண்கள் கல்வியை கைவிட்டுவிடக் கூடாது என்பது புரிந்தது. பள்ளி இடை நிற்றல் மற்றும் குழந்தைத் தொழிலாளராக செல்லக் கூடாது என்ற விழிப்புணர்வை பொம்மலாட்ட நிகழ்வு எங்களுக்குள் ஏற்படுத்தி உள்ளது’’ என்றனர்.

மகளிர் பாதுகாப்பு: அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அவிநாசிபாளையம் கிராமங்களிலும் பொம்மலாட்டம் மூலம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE