கரூர் | காவல்நிலையம் எவ்வாறு செயல்படுகிறது? - நேரில் அறிந்துகொண்ட பள்ளி மாணவிகள்

By செய்திப்பிரிவு

கரூர்: காவல்நிலையம் எவ்வாறு செயல்படு கிறது? என்பதை அரவக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவிகள் நேரில் அறிந்துகொண்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க கரூர் மாவட்ட காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பள்ளிமாணவர்கள் அருகேயுள்ள காவல்நிலையத்துக்கு சென்று அதன் செயல்பாடு களை நேரில் அறிந்துகொள்கிறார்கள்.

அந்த வகையில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று காவல் நிலைய நடைமுறைகளை அறிந்து கொண்டனர். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு விதமான பதிவேடுகள், முதல் தகவல் அறிக்கை, கணினி செயல்பாடுகள், ஆயுத அறை போன்ற அனைத்தையும் பார்வையிட்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் முறை குறித்து அவர்களுக்கு காவல் ஆய்வாளர் நாகராஜன் எடுத்துரைத்தார். தலைமை பெண் காவலர் பிரியா, பெண் காவலர் பரமேஸ் வரி ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பதை விளக்கினர். இந்நிகழ்ச்சியை ஆசிரியை ஷகிலா பானு ஒருங்கிணைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE