பொள்ளாச்சியில் நடைபெற்ற ஐசிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டியில் உள்ள திக்ஷா பள்ளியில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஐசிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தேனி,கன்னியாகுமாரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 20 பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.
14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. 50 மீட்டர்,100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் வரையிலான போட்டிகளில், ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோ, தொடர் நீச்சல் என பல்வேறு வகையிலான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநிலஅளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஐசிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago