தென்காசி: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 3 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு 500 ரூபாய், 6-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய், 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ்பயன்பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. சுகாதாரதொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) ரூ.3,000 வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் ப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் பயிலும் பள்ளியின் மூலம் இணையவழியில் (scholarship.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் மூலம் இணையவழியில் (scholarship.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும். இந்த உதவித்தொகை திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago