நெய்வேலி: நெய்வேலி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில், பொதுமக்கள் பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தற்காலிக வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பள்ளியின் தலைமையாசிரியை பொன்முடி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.ஜெகன், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் தற்காலிக வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர். வகுப்பறைக் கட்டுவதற்கு ஜெகன் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன், பள்ளி மேலாண் குழு தலைவர் விஜயகுமாரி, இந்திரா நகர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமதாஸ், இந்திரா நகர் வர்த்தக சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் ராஜா, வெல்டிங்குமார், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தெய்வசிகாமணி பங்கேற்றனர். தமிழாசிரியர் அசோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago