திண்டுக்கல்: வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வசதிகளை செய்து தரும் பெற்றோரை பார்த்திருக்கிறோம். ஆனால் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த மருந்து கடைக்காரர் ஒருவர், தனது மகள் படிக்கும் பள்ளிக்கு டிவி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருபவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர், தனது மகள் யோக, தமிழ் வழி கல்வியில் படிக்க வேண்டும் என்பதற்காக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் இந்த ஆண்டு சேர்த்தார்.
இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வி முன்னேற் றத்துக்காக ‘ஸ்மார்ட் வகுப்புகள்’ எடுப்பதற்கான டிவி உள்ளிட்ட உபகரணங்களை தனது சொந்த செலவில் சுபாஷ் சந்திரபோஸ் பள்ளிக்கு வழங்கினார். அதை பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.
தனது குழந்தை மட்டுமின்றி, உடன் சேர்த்து படிக்கும் அனைத்து குழந்தைகளும் பயன்பெற வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு பள்ளிக்கு டிவி வழங்கிய சுபாஷ் சந்திரபோஸை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago