இணையம் மூலம் நாசா விஞ்ஞானியுடன் கலந்துரையாடிய மாணவிகள்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஸ்ரேயா தேவராஜன்(17), பிளஸ் 1 படித்து வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், கடந்த ஜூன் முதல் ஜூலை 9 வரை 3 அணிகளாக ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 7 மணி முதல் காலை 8:30 மணி வரை அமெரிக்காவிலிருந்து இணையம் வழியாக பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள 45 மாணவிகளுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்து வந்தார்.

கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவிகளுக்கு, ஆங்கில பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள இப்பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. 3 ஆண்டுகளாக ஆங்கில பேச்சுப் பயிற்சி பெற்ற ரோவர் பள்ளி மாணவிகள், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காலநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் நாசா விஞ்ஞானி ரூபேஸ் ஜெயராமிடம், சனிக்கிழமை அன்று இணையம் வழியாக கலந்துரையாடினர்.

இதன்மூலம், காலநிலை மாற்றம் குறித்த நாசா-வின் பல்வேறு ஆய்வு முறைகளை அவர்கள் தெரிந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் கி.வரதராஜன், துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மேற்பார்வையில் தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலையில், கணித ஆசிரியர் பிரகாஷ் ஒருங்கிணைப்பில், அட்டல் ஆய்வக பொறுப்பாளர்கள் விஜய், மருதராஜ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE