அரசு பள்ளியில் 12 தேர்வில் முதலிடம் மாணவருக்கு ‘லேப்டாப்’ பரிசு

By செய்திப்பிரிவு

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் லேப்-டாப் பரிசு வழங்கினார். ஆண்டுதோறும் இதுபோன்று லேப்-டாப் பரிசு வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 33 ஆண்டு காலம் பொறியியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆர்.பழனிவேல். இவர் அந்த பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றியதை பெருமையாக கருதி அதன் நினைவாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு லேப்-டாப் வழங்க முடிவுசெய்தார்.

அதன்படியே இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப்-ஐ ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்பழனிவேல் கூறும்போது,"33 ஆண்டுகள் தொடர்ந்து இதே பள்ளியில் பணியாற்றிய பெருமை எனக்கு உண்டு. என் பணிக்காலத்தில் என்னால் இயன்றவரை பள்ளியின் வளர்ச்சி பணிகளை செய்து வந்தேன். நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

இந்த ஆண்டு மட்டுமல்ல இனிமேல் ஆண்டுதோறும் இதேபோன்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு லேப்டாப் பரிசளிக்க உறுதி எடுத்துள்ளேன். எனவே, முதலிடம் பெற்று இப்பரிசு வாங்க ஒவ்வொரு மாணவரும் நன்றாக படிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்