பெரம்பலூர் | அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை: ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் கீழ பெரம்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுஅளித்தனர். இதுகுறித்து கீழ பெரம்பலூர் கிராம மக்கள் கூறியதாவது:

1964-ம் ஆண்டு தொடங்கி, பொன்விழா கண்ட இந்தப் பள்ளியில் தற்போது 200-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒரேயொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்துசிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.

மழைக் காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால், அந்தநாட்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை உள்ளது.

கடந்த 2021, டிசம்பரில் பழைய2 வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, கட்டிடக் கழிவுகள் பள்ளி வளாகத்திலேயே கொட்டப்பட்டன. இவை, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளன. மாணவர்களின் நலனைக் கருதி,பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, பள்ளிக் கட்டிடத்தையும் சீரமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்