புதுக்கோட்டை | அருங்காட்சியகத்தை பார்த்து வியந்த பள்ளி மாணவர்கள்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருங்காட்சியகத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் அங்குள்ள பழங்கால பொருட்களை பார்த்து வியந்தனர்.

புதுக்கோட்டை அருங்காட்சியகம் திருக்கோகர்ணத்தில் 1910-ம் ஆண்டுபுதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம் ஆகும்.இது தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாக கருதப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் செயல்படும் இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது.

காட்சிப்பொருட்கள்

இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப்படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப் பொருட்கள், கூத்துக் கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பானைகள், சுடுமண் படிமங்கள், தொல்லுயிர்ப் படிமங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருக்கோகர்ணம்  வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் களப்பயணமாக புதுக்கோட்டை அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்வெற்றிபெற்று மேல்நிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கின்ற பள்ளி முதல்வேலை நாளில் பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தியின் ஆலோசனைப்படி இந்த களப்பயணத்தை மேற்கொண்டனர்.

அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்களை பார்த்து குறிப்பெடுக்கும் மாணவிகள்.

அருங்காட்சியக களப் பயணத்தில் தங்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் கிடைத்தன என மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர் பி. ஹரிஹரன் தன் அனுபவத்தை கூறும்போது “முதலில் இது மாதிரி ஒரு வித்தியாசமான அனுபவத்தை எங்களுக்கு மேல்நிலைவகுப்புகள் தொடங்கும் முதல் நாளில்ஏற்படுத்திக் கொடுத்த பள்ளியின்முதல்வருக்கு நன்றி. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதுவும் பள்ளிக்கு அருகில் அமைந்திருப்பது என்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம்.

இதுவரையில் காணாத பல பொருட்களின் உருவங்களை, வடிவங்களை, சிறப்புகளை கண்டு வியந்தோம், அருங்காட்சியக களப்பயணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது " என்றார்.

மாணவி பி. அட்சயநிதி கூறும்போது “அருங்காட்சியகம் என்பது என்ன? அங்கு என்னமாதிரியான பொருட்கள் இருக்கும்? என்றெல்லாம் தெரியாத எங்களுக்கு உள்ளேநுழைந்து காட்சி படுத்தப்பட்டிருந்த தொல்லியல் சார்ந்த பொருட்களைகண்டவுடன் மிகவும் ஆச்சரியமாகஇருந்தது. புதுக்கோட்டை ராஜா ராஜகோபால தொண்டைமானால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் மன்னர் பரம்பரை தொடர்பான பல செய்திகளை, ஆதாரங்களை கண்டு வியந்தோம்” என்றார்.

புதுமையான அனுபவம்

அருங்காட்சியக பயணம் குறித்து பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி கூறும்போது ‘‘ஊரெங்கும் இல்லாத புதுமையாக எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரையும் வகுப்பறைகளைத் தாண்டி வெளியேகளப்பயணங்களாக அழைத்துச் சென்று பல்வேறு வகையான அனுபவங்களை பெறச் செய்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

தனியார் பள்ளியில் மாணவர்களை அழைத்துச் செல்லும் இதுமாதிரியான களப்பயணங்கள் பெற்றோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்