மதுரை: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மதுரைமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்பாராட்டினார்.
சென்னையில் எச்சிஎல் மற்றும்கல்வி ஃபவுண்டேசன் சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான 41-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சென்னை, கோவை, மதுரை, திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்தஅரசு பள்ளி மாணவர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
மேலும் தென்மண்டல அளவிலான ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான போட்டியிலும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர்.
இதன் மூலம் அவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜூலை 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.
சிஇஓ பாராட்டு
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ள அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்களை, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பாராட்டினார். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியை பிராக்ரன்ஸ்லதா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஞானசேகர், காட்வின், முத்துக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago