மதுரை மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுடன் கூடிய கல்வி தொடங்கப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 2,332 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
மாணவர்கள் வெகு தொலைவில் இருந்து நடந்து பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது கொண்டஅக்கறை காரணமாக அதிமுக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. 2018-19-ம் ஆண்டு முதல் விளையாட்டுடன் கூடிய கல்வி முறையில் முன் குழந்தைப் பருவக் கல்வி மதுரை மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 40 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு 813 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
அரசு பள்ளிகளை தனியாருக்கு நிகராக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே கல்விக்காக அதிக நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பள்ளிகளில் மாணவ,மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன்பேசும்போது ‘‘மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த 24 பள்ளிகளில் ஹேப்பிஸ்கூலிங் என்ற திட்டம் மூலம்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு ஆலோசகர், மாணவர்களுக்கு ஒருஆலோசகர். புகார் அளிக்கும் பெட்டிமூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் பேச்சாற்றலை வளர்ப்பதற்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டம் பெரிதாகப் பயன்படுகிறது. 10-ம் வகுப்பில் அதிகமதிப்பெண்கள் பெற்ற 16 மாணவர்களைக் கொண்டு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி., ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, துணை ஆணையாளர் வி.நாகஜோதி, உதவி ஆணையாளர் பிரேம்குமார், உதவி நகர் நல அலுவலர் வினோத் ராஜா, கல்வி அலுவலர் (பொ).விஜயா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago