மாநில நீச்சல், கபடி போட்டிகளுக்கு கடமலை ஹயக்ரீவா பள்ளி மாணவர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

தேனி மாவட்ட நீச்சல், கபடி போட்டிகளில் கடமலைக்குண்டு ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் இவர்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேனி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தேனியில் நடைபெற்றன. இப்போட்டிகள் சிலம்பம், கபாடி, நீச்சல், தடகளம் உட்பட பல்வேறு போட்டிகள் வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நத்தப்பட்டன.

இதில், 40 பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் கடமலைக்குண்டு ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியும் கலந்து கொண்டது.

கபடி போட்டியில் பெண்கள் சீனியர் பிரிவிலும், நீச்சல் போட்டியில் சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளிலும் இப்பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாநில போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் குமரேசன், முதல்வர் பார்வதி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்