கோவை தேவாங்க பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி

By செய்திப்பிரிவு

கோவை தேவாங்க மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1 லட்சம் செலவில் இரும்பு மேஜைகள், இரும்பு பெஞ்சுகள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற பொருட்களை வாங்கிக்கொடுத்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவருகிறது தேவாங்க மேல்நிலைப்பள்ளி. இது ஓர் அரசு உதவி பெறும் ஆகும். இப்பள்ளியின் பழைய மாணவர்கள் இந்திய ராணுவம் உள்பட மத்திய, மாநில அரசு துறைகளிலும் பத்திரிகை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளிலும் வெளிநாடுகளிலும் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1988-ம்ஆண்டு இப்பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் 10 இரும்பு மேஜைகள், 10 இரும்பு பெஞ்சுகள், ரூ.20ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், ஒரு டேபிள் பேன்ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

தங்களை வளர்த்து ஆளாக்கிய பள்ளியை மறக்காமல் தாங்களாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு பள்ளியின் மேலாண்மைக் குழு சார்பில் தலைமை ஆசிரியர் வி.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்