விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடத் தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட யோகா போட்டிகள் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சுபாஷினி தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
ஆண்களுக்கான அணியில் பிசிண்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஐ.முத்து ஈஸ்வரன் முதல் இடம் பிடித்தார். பெண்களுக்கான பிரிவில் நெசவாளர் காலனி நகரவைஉயர்நிலைப் பள்ளி மாணவிஎஸ்.கவிதா முதல் இடம் பிடித்தார். அவர்களுக்கு பரிசுக் கோப்பை, ரூ.1,500 ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை வடமலைக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை நாகஜோதி மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago