பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்

பெரம்பலூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தினமும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு குறும்படம்

இந்நிலையில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் குறும்படங்களை திரையிட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ரோவர் மேல்நிலைப் பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்