புதுடெல்லி: பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாலும், நாட்டின் நிதித்துறை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும் நமது பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: கரோனா தொற்று பரவல், உக்ரைன் போா், நிதிச் சந்தை நெருக்கடி என்ற முப்பெரும் சவால்களை சா்வதேச பொருளாதாரம் சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயா்த்தி வருவதால், நிதிச் சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சா்வதேச நிகழ்வுகளின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை எதிா்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார அடிப்படைகள் வலுவாகஉள்ளன. நாட்டின் நிதித் துறையும் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. நாட்டின் வங்கித் துறையும், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் துறையும் வலுவாக இயங்கி வருகின்றன.எனவே, நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வலுவானதாக உள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணிகையிருப்பை ஆா்பிஐ கண்மூடித்தன மாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எதிா்காலத் தேவைகளுக்காகவும் அந்நியச்செலாவணி சேமித்துவைக்கப்பட் டுள்ளது. தற்போதைய சூழலில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago