இஸ்ரோவின் கல்வி திட்டத்தில் அரியலூர் அரசு பள்ளி மாணவர்

By செய்திப்பிரிவு

அரியலூர்: இஸ்ரோவின் விண்வெளிக் கல்வித் திட்டத்தில் பங்கு பெற அரியலூர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா உட்பட 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்றுமுதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும்கொண்டாடும் விதமாக, இஸ்ரோ 75 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், ‘அகஸ்தியர்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர். சிவதாணு, செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நிலையங்களில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் இன்று (நவ.2) பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

16 hours ago

வெற்றிக் கொடி

16 hours ago

வெற்றிக் கொடி

16 hours ago

வெற்றிக் கொடி

16 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்