15,154 மாணவர்களுக்கு பட்டங்களை பாரிவேந்தர் வழங்கினார் - தரமான கல்வி மாபெரும் மாற்றத்தை தரும்: எஸ்ஆர்எம் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் சிறப்புரை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SRMIST) 17-வது பட்ட

மளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில்மெய்நிகர் முறையில் நேற்று நடந்தது.

எஸ்ஆர்எம் இணைவேந்தர் (கல்வி) பி.சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார்.

எஸ்ஆர்எம் நிறுவனரும், வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்து 15,154 பேருக்கு பட்டம் வழங்கினார். 176 பேருக்கு பிஎச்டி ஆராய்ச்சிபட்டம், தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 256 பேருக்கு நேரடியாக பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார்.

மத்திய கல்வி, திறன் மேம்பாடு,தொழில் முனைவோர் துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான்சிறப்பு விருந்தினராக பங்கேற்றுகாணொலி மூலம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, ‘‘சமூக பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் பங்கு முக்கிய இடம்வகிக்கிறது. அதிலும் தரமானகல்வி மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும். புதிய கல்விக் கொள்கையால் தரமான கல்வி வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது’’ என்றார்.

மத்திய பாதுகாப்பு துறை செயலரும், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) தலைவருமான ஜி.சதீஷ் ரெட்டி,காணொலி மூலமாக பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசியபோது, ‘‘ராக்கெட், ஏவுகணை தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளோம். படித்த இளைஞர்கள் ஸ்டார்ட்அப் திட்டங்களில் ஈடுபடவேண்டும்’’ என்றார்.

பச்சைம்மாள் பழனிமுத்து நன்கொடை நிறுவல் விருது, ஸ்வர்ணம்டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்கொடை நிறுவல் விருது எம்பிபிஎஸ்இறுதி ஆண்டு மாணவர் ஆதித்யாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எஸ்ஆர்எம் பதிவாளர்பொன்னுசாமி, இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் ஏ.ரவிக்குமார், இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE