புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அம்மாநிலக் கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஒரு மாதம் முன்பு 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இப்போது கரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளோம். நவம்பர் 8ஆம் தேதி புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும்.
அவ்வப்போது அரசு வெளியிடும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் இயங்கும். 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4,6, 8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமையிலும் நடைபெறும். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது.
» முதுகலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: நவ.20 கடைசி
» நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் தமிழகம் என்ன பயன் பெற்றது?- காந்திய மக்கள் இயக்கம் கேள்வி
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அனைத்து நிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தற்போது 95 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்கள் கரோனாவாலும், நீண்டகால நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிய கால அவகாசத்துக்குப் பின் தடுப்பூசி செலுத்திக்கொள்வர். தலைமை ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். சுய விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago