‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: இணையவழியில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 முடித்த பிறகு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது என்கிற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் இணைய வழியேயான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை முதல் 3 நாட்கள் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் எம்பீடெட் சிஸ்டம்ஸ், ஐஓடி படிப்புகள் குறித்து பெங்களூரு அனலாக் டிவைசஸ் இண்டியா (சாப்ட்வேர் & சிஸ்டம்ஸ்) சீனியர் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் பிரசாத், பெங்களூரு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அனலாக் டிசைன் இன்ஜினீயர் பி.லக்ஷ்மணன், சென்னை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவி பேராசிரியர் டாக்டர் ஏ.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றுஆலோசனை வழங்குகின்றனர்.

சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், ஃபுட் சயின்ஸ் & அக்ரிகல்சர் படிப்புகள் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக டீன் (அக்ரிகல்சர்) டாக்டர் எம்.கல்யாணசுந்தரம், கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவி பேராசிரியர் டாக்டர் பி.ஆர்.ஜான்சிராணி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் – எனர்ஜி சயின்ஸ் படிப்புகள் குறித்து சென்னை அண்ணா பல்கலை. முன்னாள் டீன், சிஇஜிடாக்டர் எஸ்.இனியன், கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள்.

இந்த ஆன்லைன் நிகழ்வில், பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர்களும், அவர்களது பெற்றோரும் பங்கேற்கலாம். கட்டணம் கிடை
யாது. இதில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வை ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் உடன் இணைந்து வழங்குகிறார்கள். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்க விரும்புபவர்கள் https://www.facebook.com/hindutamilevents என்ற ஃபேஸ்புக் லிங்க்கிலும், https://bit.ly/3dHj4Q9 என்ற யூ-டியூப் லிங்க்கிலும் இணைந்திருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்