அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர் பொன்முடி பேட்டி

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ''திமுக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

அவர்கள் பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறைகளில் குளறுபடி நடந்திருப்பதாகவும் அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏராளமான மாணவர்கள் அரியர் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றபோது முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் குறித்துப் பேசுவதற்காக மாணவர்களை அழைத்து இருக்கிறோம்.

இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்கல்வித் துறைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகளின் ஆலோசனைக்ஷ் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்