காந்தியடிகள் பாரம்பரியத்தை கல்லூரி மாணவர்களுக்கு கொண்டு செல்லல் நிகழ்வு: மதுரை காந்தி அருங்காட்சியகம் ஏற்பாடு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இணைய வழி வாயிலாக காந்தி மியூசியம் சார்பில் காந்தியடிகள் பாரம்பரியத்தை கல்லூரி மாணவர்குளுக்குக் கொண்டு செல்லும் நிகழ்வு தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக தேசிய காந்தி அருங்காட்சியகம், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து, மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து நிலக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இணைய வழியில் "காந்தியடிகள் பாரம்பரியத்தை மாணவர்களுக்கு கொண்டு செல்லல்" நிகழ்ச்சியை நடத்தின.

மகாத்மா காந்தியடிகள் குறித்த வினாடி வினா நிகழ்ச்சியை புதுடெல்லி, தேசிய காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை நடத்தினார்.

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் எம். பரமேஸ்வரி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எம்.பாண்டீஸ்வரி வரவேற்றார்.

மோக்‌ஷிதா ஷர்மா நன்றியுரை வழங்கினார். தீபாலி உஜ்ஜைன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தாராவ், சென்னை காந்தி கல்வி நிலையப் பொறுப்பாளர் முனைவர் பிரேமா, மதுரை காந்தி சிந்தனைக் கல்லூரி முதல்வர் முனைவர் முத்து இலக்குமி, தேசிய காந்தி அருங்காட்சியக காப்பாட்சியர் அஸ்கர் அலி, தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் அஜய் குமார் மற்றும் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

இதுபோல் கல்லூரி மாணவர்களுக்கு காந்தியடிகளின் பாரம்பரியத்தைக் கொண்டு நிகழ்வு ஆண்டு முழுவதும் நடக்கும் என்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தாராவ் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்