இந்திய மாணவர்களால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்பு

By பிடிஐ

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு இந்திய மாணவர்கள் ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்புச் செய்துள்ளதாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் மற்றும் சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டில் 10,75,496 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் 5-வது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்பு செய்துள்ளனர்.

வழக்கம்போல அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களைப் பொறுத்தவரை சீனா தொடர்ந்து 16-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது 3.72 லட்சம் சீன மாணவர்கள் 2019-20 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கின்றனர். இதில் 1,93,124 மாணவர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 4 சதவீதமும் நைஜீரியாவில் 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. எனினும் சவுதி அரேபியாவில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 17 சதவீதம் குறைந்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

14 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்