காந்திகிராம கிராமியப் பல்கலை இறுதி பருவத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
காந்திகிராம கிராமியப் பல்கலை தேர்வுக்கட்டுப்பாட்டாளர் என்.டி.மணி கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலையில் இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு கடந்த செப்டம்பர் 17 முதல் நடைபெற்றது.
பல்கலையில் முதுகலை, இளங்கலை இறுதியாண்டு பயின்ற மாணவர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுதிவருகின்றனர்.
தேர்வு எழுதியவுடன் விரைவாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று உடனுக்குடன் முடிவுகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
அக்டோபர் 1-ம் தேதி வரை இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறுகிறது. இதன்முடிவுகள் விரைவுகள் வெளியிடப்படும். இதுதவிர பல்கலையில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பல்கலை மானியக்குழு அறிவுறுத்தலின்படி 60:40 எனும் விகிதத்தில் உள்மதிப்பீட்டு தேர்வு மற்றும் முந்தைய இறுதிபருவத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும், என்றார்.
இறுதி பருவத் தேர்வு முடிவுகள் அந்தந்த துறைகளில் உள்ள அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
பல்கலை துணைவேந்தர் பி.சுப்புராஜ் கூறுகையில், "பல்கலையில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் நடைபெற்றுவருகிறது.
பல்கலை பதிவாளர் சிவக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை கடைப்பிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்..
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago