11, 12-ம் வகுப்பு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மீதான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நோட்டிஃபிகேஷன் பக்கத்தில் 08.09.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் உடன் மேற்காண் இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

மேலும்