தினமும் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் கல்விதொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதை காணத் தவறியவர்கள் யூ-டியூப் சேனல், இணையதளத்தில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்வி தொலைக்காட்சியின் தினசரி ஒளிபரப்பு ஜூலை 15 முதல் ‘வீட்டுப்பள்ளி’ நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தலுக்கான தேவையை நிறைவேற்றும் வகையில், பள்ளியில் பாடவாரியாக வகுப்புகள் நடத்தப்படுவதுபோல தொலைக்காட்சி வாயிலாக வீட்டுக்கே வகுப்பறையை கொண்டுவரும் வகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
கடந்த கல்வி ஆண்டில் 2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இறுதி தேர்வு எழுத முடியாததாலும், கடந்த 4 மாதங்களாக பள்ளிக்குச் செல்ல முடியாததாலும் அவர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இணைப்புப் பாட பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) அளிக்கப்படுகிறது. 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் 5 பாடங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
10-ம் வகுப்பு: காலை 8 முதல் 9 மணி: தமிழ், ஆங்கிலம். 10 முதல் 11 மணி: கணிதம், அறிவியல். மதியம் 12 முதல் 12.30 மணி: சமூக அறிவியல்.
9-ம் வகுப்பு: காலை 9 முதல் 10 மணி: தமிழ், ஆங்கிலம். 10 முதல் 11 மணி: கணிதம், அறிவியல். மதியம் 12 முதல் 12.30 மணி: சமூக அறிவியல்
8-ம் வகுப்பு: பிற்பகல் 1.30 முதல் 2.30 மணி: தமிழ், ஆங்கிலம். 3 முதல் 4 மணி: கணிதம், அறிவியல். மாலை 4.30 முதல் 5 மணி: சமூக அறிவியல்.
அதேபோல, 7-ம் வகுப்பு (மதியம் 2.30-3.00), 6-ம் வகுப்பு (மாலை 4.00-4.30), 5-ம் வகுப்பு (மாலை 6.30-7.00), 4-ம் வகுப்பு (மாலை 6.00-6.30), 3-ம் வகுப்பு (மாலை 5.30-6.00), 2-ம் வகுப்புகளுக்கும் (மாலை 5.00-5.30) பாடங்கள் ஒளிபரப்பாகும்.
2 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள் - தமிழ், செவ்வாய் - ஆங்கிலம், புதன் - கணிதம், வியாழன் - அறிவியல், வெள்ளி - சமூக அறிவியல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியுடன் சஹானா, புதுயுகம், ராஜ், கேப்டன் நியூஸ்,சத்தியம், லோட்டஸ் மக்கள் உள்ளிட்ட சில தனியார் தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பாவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாணவர்கள் மட்டுமின்றி, கரோனாகாலத்தில் அண்டை மாநிலங்களில் விடுப்புக்குச் சென்றிருப்பவர்களும் நிகழ்ச்சிகளை காணலாம்.
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்க தவறியவர்கள், மறுநாள் யூ-டியூப் சேனலில் (https://youtube.com/kalvitvofficial) காணலாம். இணையதளத்திலும் (https://e-learn.tnschools.gov.in/welcome) இப்பாடங்களை பார்த்து பயன்பெறலாம். நிகழ்ச்சி நிரல் விவரத்தை கல்வி தொலைக்காட்சி இணையதளத்தில் (www.kalvitholaikaatchi.com) தெரிந்துகொள்ளலாம்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ‘தடையும் விடையும்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக கேள்வி-பதில் மற்றும் திருப்புதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய முயற்சியாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து முதல்கட்டமாக, 10-ம் வகுப்பு படிக்கும் செவித் திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்காக சைகைமொழி, உதட்டசைவு மூலம் பேச்சை வெளிப்படுத்துதல் முறையில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago