திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையம் சூரிய கிரகணத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பியது.
வழக்கமாக சூரிய கிரகணம், சந்திரகிரகணம் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கிகள் மூலம் பார்வையாளர்கள் பார்க்கவும், அக் காட்சிகளை பெரிய திரைகளில் திரையிடவும் அறிவியல் மையம் ஏற்பாடுகள் செய்யும்.
ஆனால் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை பார்வையிட பார்வையாளர்கள் யாரும் அறிவியல் மையத்தில் அனுமதிக்கப்படவில்லை.
அதேநேரத்தில் வீடுகளில் இருந்தபடியே பொதுமக்கள் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் சூரிய கிரகணத்தை பார்வையிடும் வகையில் யூடியூப், ஃபேஸ்புக், கூகுள்மீட் போன்ற இணையதளங்களில் நேரடியாக கிரகண காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அறிவியல் மைய வளாகத்தில் தொலைநோக்கி மூலம் கிரகண காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்பட்டது. அக்காட்சிகளை விடியோ கேமிராக்கள் மூலம் பதிவு செய்து இணையதளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம். குமார் கூறும்போது, கரோனா அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலியில் பகுதியளவுக்கும் குறைவாகவே சூரிய கிரகணம் தெரிந்தது.
வரும் 2027-ம் ஆண்டிலும் இதுபோன்ற சூரிய கிரகணம் நிகழவுள்ளது. தொடர்ந்து 2031 மே 27-ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை முழு அளவில் திருநெல்வேலியில் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago