10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டன. தொற்று அச்சத்தால் தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட, 12-ம் வகுப்புத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் மே 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளன.
இந்நிலையில், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் முதல், ஆன்லைனில் வகுப்புகளை நடத்த பல்வேறு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதற்கிடையே புதிய கல்வி ஆண்டில் கற்பித்தல் பணிகள் தாமதமாகும் என்பதால், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago