தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்த இக்கட்டான சூழலிலும் பெரும்பாலான பள்ளிகள் தங்களின் ஆண்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக நாடு முழுவதுமுள்ள ஏராளமான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 3 மாதத்துக்கும் சேர்த்துப் பணத்தைக் கட்டுமாறு நிறையப் பள்ளிகள், பெற்றோரை வலியுறுத்தி வருகின்றன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்குக் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக பெற்றோர் நலனுக்கு ஏற்றவகையில், அனைத்து மாநிலங்களின் கல்வித்துறைகளும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
சில மாநிலங்கள் இதுகுறித்து சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அவர்களின் முன்னெடுப்பைப் பாராட்டுகிறேன். அதேவேளையில், மற்ற மாநிலங்களும் என்னுடைய கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்
» அலுவலகப் பணிக்காக தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி: அரசிடம் வேண்டுகோள்
» மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தாமதமின்றி வழங்கப்படும்- தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்
கரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago