பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு இன்று முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கால் உட்பட) ஹால்டிக்கெட்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 26 (இன்று புதன்கிழமை) முதல் 28-ம்தேதி வரை நடைபெறும். அனைத்து வகைதனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
செய்முறைத் தேர்வு நடைபெறும் மையம், நாள் விவரங்களை சம்மந்தபட்ட பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரியை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தனித்தேர்வர்கள் விரைவாக தங்கள்ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையை தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம்தேதி வரை நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வைபள்ளி மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago