அமெரிக்கா எவ்ளோ பெரிசு?- மெலானியாவிடம் கேட்ட பள்ளிச் சிறுமி!

By செய்திப்பிரிவு

டெல்லியில் அரசுப் பள்ளிச் சிறுமிகளின் கேள்விகளுக்கு மெலானியா ட்ரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா இருவரும் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். மெலானியா இன்று (பிப்.25) தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா சர்வோதயா சீனியர் செகண்டரி அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அப்போது களிமண்ணில் பொம்மைகள் செய்து கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளிடம் மெலானியா கலந்துரையாடினார். அப்போது சிறுமி ஒருவர், ''அமெரிக்கா எவ்ளோ பெரிசு?'' என்று கேட்டார். ''அமெரிக்கா ரொம்ப தூரத்தில் இருக்கா?'' என்றார் மற்றொரு சிறுமி.

புன்னகையுடன் அவர்களின் கேள்விகளுக்கு மெலானியா பதிலளித்தார்.

பொம்மைக் கட்டிடங்களை எழுப்பிக் கொண்டிருந்த சிறுமிகளில் சிலரிடமும் மெலானியா பேசினார். அதில் ஒரு சிறுமி, ''அமெரிக்காவின் முதல் குடிமகளாக நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாகப் பேசிய மெலானியா, ''மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்'' என்றார்.

குழந்தைகளின் அறிவாற்றல், மொழி, கல்வியறிவு, எண் மற்றும் கலைகள் ஆகியவற்றைப் பள்ளிகளில் வளர்த்து, அதன் வழியாக மன வளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்வதே மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்