உயர் மதிப்பெண்களுக்கு உதவும் அகமதிப்பீடு தேர்வுகள்: பிளஸ் 1 கணினி அறிவியல்/ கணினி பயன்பாடுகள்/ கணினி தொழில்நுட்பம்

By செய்திப்பிரிவு

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 1 கணினி பாடங்களை கணினி உதவியுடனான செய்முறை அறிவோடு பயின்றால், எளிமையாக புரிந்துகொள்ள முடிவதுடன் மதிப் பெண்களை குவிக்கவும் இயலும்.

வினாத்தாள் அமைப்பு

70 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் 4 பகுதிகளாக அமைந்துள்ளது. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுவதாக 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் அமைந் துள்ளன. 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகள் தலா 9-லிருந்து 6-வினாக்களுக்கு விடையளிப்பதாகவும், அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகவும் அமைந்திருக்கும். ‘அல்லது’ வகையிலான 5 வினாக்கள் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெறுகின்றன. அவை ஒரு முழு வினாவாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு வினாக்களின் தொகுப்பாகவோ அமைந்திருக்கும்.

தேர்ச்சி நிச்சயம்

தேர்ச்சியை உறுதி செய்ய விரும்பும் மாணவர்கள், ஒரு மதிப்பெண் பகுதிக்கு முழுமையாக தயாராவதுடன், பொதுவான பாடமாகிய 2-ம் பாடத்தின் எண்முறை மாற்றம் கணக்குகளில் போதிய பயிற்சி பெறுவது அவசியம். மேலும் தேர்ச்சிக்கு அப்பால் 70-க்கு குறைந்து 30 மதிப்பெண்களை உறுதி செய்ய கீழ்கண்டவாறு படிக்கலாம்.

கணினி அறிவியலில், கணிப்பொறி மொழிகளுக்கு அடிப்படையான 10, 11, 15, 16 ஆகிய பாடங்கள் அவசியமானவை.

கணினி பயன்பாடுகளில் முக்கியமான 3, 6, 7 பாடங்களின் வினாக்களுடன், HTML ஒட்டுகள் (Tags), ஜாவா ஸ்கிரிப்ட் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் ஆகிய பாடங்களையும் படிக்க வேண்டும். கணினி தொழில்நுட்பத்தில் கணினி அமைப்பு, சொற்செயலி மற்றும் அட்டவணை செயலியில் உள்ள பட்டி தேர்வுகள், கணினி வலையமைப்பு ஆகியவை முக்கியமானவையாகும்.

அதிக மதிப்பெண்களுக்கு

கணினி அறிவியல் மற்றும் கணினிபயன்பாடுகளில் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகவும் தெளிவாகவும் படிப்பதுடன், நிரல்களை புரிந்துகொண்டு சுயமாகவே சிறிய அளவிலான நிரல்களை எழுதவும், நிரல்களின் பிழைகளை திருத்தவுமான திறன் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.

கணினி அறிவியலில் 2, 10, 11, 14, 15, 16 பாடங்கள் முக்கியமானவை. அதிலும் அப்பாடங்களின் நிரல்கள், விரிவான விடையளி பகுதியின் கடைசி 2 வினாக்களின் நிரலின் வெளியீடு, நிரலின் பிழைகள் ஆகியவை முக்கியம்.

கணினி பயன்பாடுகளில் HTML-ல் வலைப்பக்கத்தை உருவாக்க பயன்படும் அனைத்து ஒட்டுகளின் பயன்பாட்டையும், செய்முறை அறிவுடன் தெளிவாக கற்கவேண்டும். வலைப்பக்கம் உருவாக்கு வதுடன் அதனிடையே ஊடாட பயன்படும் ஜாவா ஸ்கிரிப்ட் மொழியில் உள்ள அனைத்து வினாக்களையும் படித்தாக வேண்டும். இந்த வகையில், 9, 12, 14, 15, 16, 17 பாடங்களின் வினாக்களை முழுமையாக படிக்க வேண்டும்.

கணினி தொழில்நுட்பத்தில் சொற்செயலி மற்றும் அட்டவணை செயலியில் உள்ள அனைத்து வினாக்களையும் படிப்பது அவசியம். இத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ள விசைப்பலகை குறுக்குவழிகளையும் எழுதிப் பார்த்து பயிற்சி பெறுவது நல்லது.

தவிர்க்க வேண்டியவை

சற்றே வேறுபடும் சொற்களைக் கொண்ட வினாக்களுக்கு விடைகளை மாற்றி எழுதுவதில் மாணவர்கள் அதி கம் தவறிழைக்கிறார்கள். இதற்கு கணினி அறிவியலில் எ.கா.: ’செயற்கூறு பணிமிகுப்பு - செயற்குறி பணிமிகுப்பு’. கணினி பயன்பாடுகளில் எ.கா., ’தலைப்பு ஒட்டுகள் – தலைப்பு பகுதி ஒட்டுகள்’. கணினி தொழில்நுட்பத்தில் எ.கா., ‘சொற்செயலியில் உள்ள எண்வரிசை உருவாக்கல் – அட்டவணை செயலியில் உள்ள எண்வரிசை உருவாக்கல்’.

கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் அதிகமாக காணப்படும் பொது வடிவங்கள் நிரல் எழுதுவதில் முக்கியமானவை. இவற்றை பலமுறை எழுதிப் பார்த்தால் மட்டுமே தவறுகளைத் தவிர்க்க முடியும். மேலும் 3 பாடங்களுக்கும் பொதுவாக உள்ள 2-ம் பாடத்தின் எண்முறை மாற்றம் கணக்குகளை தீர்க்கும்போது வழிமுறைகளின்படி கவனம் தேவைப்படுவதுடன், அடிமானம் என்னவென்று கவனிப்பதும் தவறுகளை தவிர்க்க உதவும்.

வினாக்களை முறையாக வாசித்து பொருளுணர்ந்து உரிய விடையினை அளிக்க வேண்டும். உதாரணமாக, ’குறிப்பு வரைக, அவை யாவை, எடுத்துக்காட்டு தருக’ போன்றவை வினாவுக்கு ஏற்ப ஒரே பதிலை வெவ்வேறாக அமைக்கும்.

கணினி தொழில்நுட்பத்தில் எந்த பட்டியில் எந்த தேர்வு இடம்பெறும் என்பதையும், விசைப்பலகை குறுக்கு வழியையும் கவனமாக படிக்க வேண்டும்.

நேர மேலாண்மை

ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20, 2 மதிப்பெண் பகுதிக்கு 30, 3 மதிப்பெண் பகுதிக்கு 45, 5 மதிப்பெண் பகுதிக்கு 60 என அதிகபட்ச நிமிடங்களை பிரித்துஒதுக்கலாம். மிச்சமுள்ளதில் 15 நிமிடங்களையேனும் திருப்புதலுக்கு செலவிடலாம்.

கணினி அறிவியல் மாணவர்களுக்கு நிரல்கள் எழுதுவதற்கும் மற்றும் நிரல்களின் பிழைகளை திருத்துவதற்கும் நேரம் அதிகமாக தேவைப்படும். கணினி பயன்பாடுகள் மாணவர்களுக்கும் நிரல்கள் அடிப்படையான வினாக்கள் இடம்பெற்றால் நேரம் கூடுதலாக லாம். படிக்கும்போதே முறையான பயிற்சியும், தொடர் திருப்புதலும் கடைப்பிடித்தால் தேர்வறை நேர விரயத்தை தவிர்க்க முடியும்.

திருப்புதலில் கவனம்

தேர்வு நெருக்கத்தில், இடைத்தேர்வுகளில் தொடங்கி, காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளின் வினாத்தாள்களில் திருப்புதல் மேற்கொள்வது முறையான திருப்புதலாக அமையும்.

அகமதிப்பீட்டிற்கான தேர்வில் மாணவர்கள் தவறாது பங்கேற்று அனைத்துவினாக்களுக்கும் முறையாக விடையளிப்பதும், அந்த வினாக்களின் அடிப்படையில் திருப்புதல் மேற்கொள்வதும் 50/70 என மதிப்பெண்களை உயர்த்த உதவும்.

நிரல்கள் அடிப்படையான வினாக்களில் இருந்தே உயர் சிந்தனைக்கான வினாக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. பாடப்பகுதியில் உள்ள ’குறிப்பு, உங்களுக்குத் தெரியுமா?, சொற்களஞ்சியம்’ ஆகிய பகுதிகளில் முறையான திருப்புதல் மேற்கொள்வது, 1 மற்றும் 2 மதிப்பெண்களுக்கு உதவும். மேலும்ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் முக்கியபகுதிகளை அடிக்கோடிட்டு வைத்திருப்ப திலிருந்து திருப்புதல் செய்வதும் அவற்றுக்கு உதவும்.

பாடக்குறிப்புகளை வழங்கியவர்:

நா.மாணிக்கசெல்வி,

முதுகலை ஆசிரியர்(கணினி அறிவியல்),

அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாக்கம்,செங்கல்பட்டு மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

மேலும்