மொழிபெயர்ப்பு: அரச தொட்ட மரங்கள் எங்கே போயின?

By செய்திப்பிரிவு

Where did trees in the royal garden go?

The next morning, Maharaj and Tenali Raman rode their respective horses and started moving towards flood affected areas. At some distance the Maharaja stopped and in shock asked Tenali Raman, 'Where did these beautiful trees and fruit trees in the royal garden go?' Tenali said sarcastically, 'Maharaj, this tree may have been washed away by the flood.'

On hearing this talk of Tenali Raman, Maharaj became silent and gestured to move forward. Both of them were able to move forward some distance that Maharaj's eyes fell on the drains present there. The minister was asked to build a bridge on the drains, but instead of the bridge, tree trunks were inserted. The Maharaj understood that the minister had put the trunks of the trees of the royal gardens on the drains.

Then Tenali Raman quipped and said, 'Maharaj it may be that the trunk of the tree came here and got stuck due to flood. The bridge that the minister was talking about will be built next.

Even on this the Maharaj did not say anything and went ahead and reached a village. There was flood water all around the village. The people present there were helpless due to the flood. Some people were climbing on the tiles lying on their houses to save their lives. Seeing this sight, Tenali Raman said, 'Look, my lord! The minister has mounted these people on the roofs of the house, so that in future also they are not harmed by floods.’

Now ultimately the patience of Krishnadevaraya was broken and he trembled with anger. Without delay, he came back to his palace and sent a message to that minister to be present at the court.

The minister reached the court in fear. Seeing him, Maharaj got angry. He reprimanded the minister and ordered him to deposit all the money in the royal treasury at the earliest. At the same time, Maharaj has now entrusted the task of carrying out relief and rescue work in the state to Tenali Raman. When someone trusts you and gives a big responsibility, you should do that work with full honesty and integrity.

அரச தொட்ட மரங்கள் எங்கே போயின?

மறுநாள் காலை, மன்னரும் தெனாலி ராமனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நோக்கி தத்தம் குதிரைகளில் ஏறி புறப்பட்டனர். “அரச தோட்டத்தில் உள்ள அழகிய மரங்களும் பழ மரங்களும் எங்கே போயின?” என்று சற்று தூரம் சென்றதும் அதிர்ச்சியுற்ற மன்னர் தெனாலி ராமனிடம் கேட்டார். அதற்கு தெனாலி, “மன்னா இந்த மரங்களெல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்று கிண்டலாகச் சொன்னார்.

தெனாலி ராமனின் பேச்சைக் கேட்டதும் மௌனமானார் மன்னர். முன்னேறி செல்லும்படி சைகை செய்தார். இருவரும் சிறிது தூரம் முன்னேறிச் செல்ல, மன்னரின் கண்கள் அங்கிருந்த வடிகால்களை கண்டன. வடிகால்கள் மீது பாலம் அமைக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பாலத்திற்கு பதிலாக மரங்கள் செருகப்பட்டிருந்தன. அரச தோட்டத்தில் இருந்த மர கட்டைகள் வடிகால்களின் மேல் போடப்பட்டதை மன்னர் புரிந்து கொண்டார்.

அப்போது தெனாலி ராமன் கேலியாக, “மன்னா, வெள்ளத்தில் அடிக்கப்பட்டு மரங்கள் இங்கு வந்து சிக்கிக் கொண்டிருக்கலாம். அமைச்சர் பேசிய பாலம் அடுத்ததாக கட்டப்படும்” என்றார்.

அதற்கும் மன்னர் எதுவும் பேசாமல் முன்னே சென்று ஒரு கிராமத்தை அடைந்தார். கிராமம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. வெள்ளம் காரணமாக அங்கிருந்த மக்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீட்டு ஓடுகளின் மேல் ஏறிக் கொண்டிருந்தனர். இக்காட்சியைக் கண்ட தெனாலி ராமன்,“இதோ பாருங்கள், அரசே! எதிர்காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில், இந்த மக்களை வீட்டின் கூரைகள் மீது ஏற்றி வைத்துள்ளார் அமைச்சர்” என்றார்.

இப்போது கிருஷ்ணதேவ ராயர் பொறுமை இழந்து கோபத்தில் நடுங்கினார். தாமதிக்காமல், மீண்டும் தனது அரண்மனைக்கு சென்று, அந்த அமைச்சரை அரசவையில் ஆஜராகுமாறு செய்தி அனுப்பினார்.

அமைச்சர் பயத்தில் அரசவையை அடைந்தார். அவரைப் பார்த்ததும் மன்னருக்கு கோபம் வந்தது. அவர் அமைச்சரைக் கண்டித்து, உடனடியாக அரச கருவூலத்தில் பணத்தை வைக்க உத்தரவிட்டார். அதே நேரத்தில் மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியை தெனாலி ராமிடம் ஒப்படைத்தார்.

ஒருவர் உங்களை நம்பி ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தால், நீங்கள் அந்த வேலையை நேர்மையாகச் செய்து முடிக்க வேண்டும். - கட்டுரையாளர்: ஆங்கிலத் துறை முன்னாள் உதவிப் பேராசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்