ஆங்கிலத்தில் சில பயன்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். எது சரியான பயன்பாடு என்பதில் தெளிவு கிடைக்க அந்த வாக்கியங்களை அதிக அளவில் உரிய இடங்களில் பயன்படுத்தினால் மட்டுமே தெளிவுபெற முடியும்.
I am walking என்றால் ‘நான் நடந்து கொண்டிருக்கிறேன்’ என்று பொருள். I have been walking என்றாலும் ‘நான் நடந்து கொண்டிருக்கிறேன்’ என்று தான் பொருள். ஆனால், இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
I am walking என்பது Present continuous வகையைச் சேர்ந்தது.
I have been walking என்பது Present perfect continuous வகையைச் சேர்ந்தது.
» கரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்?
» அன்பான மாணவர்களே! - குழந்தைகள் தின போட்டிகளுக்குத் தயாராகுங்கள்!
I am walking என்றால் நான் தற்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இந்த செயல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். உதாரணமாக, I am walking at Marina beach now என்றால் நான் மெரினா கடற்கரையில் தற்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று பொருள்.
I have been walking at Marina beach for the past three years என்றால் நான் மெரினா கடற்கரையில் மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். அவர் மூன்று ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் காலை வேளைகளில் நடந்து கொண்டிருக்கிறார், இனிமேலும் நடப்பதை தொடர்வார் என்ற பொருளைக் கொடுக்கும் வாக்கியம் தான் இது. இதற்கு முன்பும் நடந்திருக்கிறார். இப்போதும் நடக்கிறார். எதிர்காலத்திலும் நடப்பார் என்ற பொருள் வரும் இடங்களில் இதுபோன்ற வாக்கியத்தை பயன்படுத்த வேண்டும்.
தமிழில் ஊறுகாய் என்று சொல்வார்கள். ஊறியகாய், ஊறுகின்ற காய், ஊறப்போகும் காய் ஆகிய முக்காலத்தையும் இணைக்கும் சொல்லாக ஊறுகாய் இருக்கும். அதேபோன்ற ஒரு பயன்பாடு தான் Present Perfect Continuous tense வாக்கியங்களுக்கும் உண்டு.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago