Schools run by DSGMC to use social robot for better hygiene practices among students
New Delhi
Social robot 'Pepe' will nudge children studying in schools run by the Delhi Sikh Gurudwara Management Committee to adopt better hygiene practices.
'Pepe' developed by researchers from the University of Glasgow in collaboration with the Amrita Vishwa Vidyapeetham University in India will be used in DSGMC schools to give a fresh approach to hygiene, said Manjinder Singh Sirsa, president of the Committee.
"Pepe robots each costing around Rs 7000 will be mounted on the wall above hand washing stations near wash rooms to inspire nearly 20,000 children studying in coeducation institutions to wash their hands properly," he said.
The speaking robot will interact with children as they will pass by the sink and encourage them to practise proper handwashing, Sirsa said.
The 12 branches of Guru Harkishan Public School, run by the Delhi Sikh Gurdwara Management Committee will install proper hand washing machines to promote hygiene practices among children, he said.
"DSGMC will install hand washing stations that are appropriate for the school and place them in areas where they will best serve the students."
School kids below 10 years from marginal sections of society who are most affected by poor sanitation and hygiene will be especially targeted under the programme, Sirsa said.
"An exclusive mobile app will be developed for monitoring the success of the programme. School teachers will take photos of hygiene practices adopted by children on the campus and post it on the mobile application regularly," he said.
Under the initiative, teachers will have to click photos with various facilities inside schools, including hand-washing units, toilets and cleanliness of class rooms, play grounds and the campus to cultivate habit of handwashing and cleanliness among school students, Sirsa added.
- PTI
சுகாதாரத்தை பின்பற்ற பள்ளிகளில் ‘பெப்பே ரோபோ’
புதுடெல்லி
டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவால் (டிஎஸ்ஜிஎம்சி) நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையில் பெப்பெ என்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய 'பெப்பே ரோபோ’ டிஎஸ்ஜிஎம்சி பள்ளிகளில் சுகாதாரம் குறித்த புதிய அணுகுமுறையை வழங்க பயன்படும் என்று குழுவின் தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
இந்த பெப்பெ ரோபோக்கள் கழிவறைகளுக்கு அருகே உள்ள கை கழுவும் இடங்களுக்கு மேலே சுவரில் பொருத்தப்படும். இதன்மூலம், ஆண் - பெண் என்ற இருபாலர்கள் படிக்கும் பள்ளிகளில் பயிலும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகளை சரியாக கை கழுவ ஊக்குவிக்கலாம். ஒரு பெப்பெ ரோபோ அமைக்க ரூ.7 ஆயிரம் வரை செலவாகும்.
கை கழுவும் இடத்தில் பொருத்தப்பட்ட இந்த பேசும் ரோபோவானது, குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதால், கை கழுவும் பயிற்சி ஊக்குவிக்கப்படும். டிஎஸ்ஜிஎம்சி நடத்தும் 12 பள்ளிகளிலும் குழந்தைகளின் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கை சலவை ரோபோக்கள் நிறுவப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும். இந்த திட்டமானது, மோசமான சுகா
தாரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளை சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக செல்போன் செயலி உருவாக்கப்படும். வளாகத்தில் குழந்தைகள் கடைபிடிக்கும் சுகாதார நடைமுறைகளை பள்ளி ஆசிரியர்கள் புகைப்படங்கள் எடுத்து, அதனை செல்போன் செயலில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களிடையே கை கழுவுதல் மற்றும் தூய்மைப் பழக்கத்தை வளர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளுக்குள் இருக்கும் கை கழுவும் இடம், கழிவறைகள், வகுப்பு அறைகளின் தூய்மை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் புகைப்படங்கள் எடுத்து செயலில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு சிர்சா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago