சட்டாம்பிள்ளைத்தனமாக திரியும் குழந்தைகளுக்கு மூளை சிறிது- புதிய ஆய்வு

By செய்திப்பிரிவு

Kids who lie, steal, bully well into adulthood may have smaller brain surface area: Lancet study

London

People who exhibit lifelong, persistent antisocial behaviour, may have smaller surface areas in several brain regions compared to those who do not exhibit the trait, according to a study which may lead to better interventions for juvenile offenders.

The study, published in the journal The Lancet Psychiatry, noted that individuals exhibiting life-course-persistent antisocial behaviour like stealing, lying, bullying, or violence may have thinner outer brain layer, the cortex, and smaller surface area in regions associated with antisocial behaviour, compared to those who do not exhibit the trait.

According to the researchers, including those from the University College London (UCL) in the UK, some people display life-course-persistent antisocial behaviour that begins in childhood and lasts into adulthood, whereas others exhibit the trait in adolescence which desists as they mature into adults.
In the study, they compared structural brain differences using MRI scans in people with either life-course-persistent or adolescent-only antisocial behaviour, and those without the trait.

They said the results provided the first robust evidence to suggest that underlying neurological differences are primarily associated with life-course-persistent antisocial behaviour.

In the study, the researchers used MRI brain scans from 672 participants aged about 45 years.
They assessed reports on conduct problems of the participants from parents, carers, and teachers.- PTI

சட்டாம்பிள்ளைத்தனமாக திரியும் குழந்தைகளுக்கு மூளை சிறிது: புதிய ஆய்வு

லண்டன்:

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்கள் குறித்து அண்மையில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறுவயதில் இருந்து வாழ்நாள் முழுவதும் சமூக விரோதியாக திரிபவர்களின் மூளையின் சில பாகங்கள் சிறியதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருட்டு, பொய்சொல்லுதல், சட்டாம்பிள்ளைத்தனமாக மற்றவர்களை ஏய்த்துப் பிழைத்தல், அடிதடி போன்ற வன்முறை செயல்
களில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோத நடத்தை கொண்ட சிறார்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகும் அவர்களுடைய மூளை வளராதாம்.

அதிலும் மூளையின் வெளிப்பகுதியை மூடி இருக்கும் புறணி என்ற பகுதி நடத்தை கோளாறு உடையவர்களுக்கு மெல்லிதாக இருக்குமாம். ஆனால், நன்னடத்தை உடையவர்களுக்கு இந்த பகுதி தடிமனாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த
ஆராய்ச்சியை பிரட்டனைச் சேர்ந்த லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் செய்திருக்கிறார்கள். ‘லேன்செட் சைக்கேட்ரி’ என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சி முடிவு வெளியாகி இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் குற்றவாளியாக இருந்தவர்கள், பதின்பவருத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், நன்னடத்தை கொண்டவர்கள்ஆகிய மூன்று வகைப்பட்ட மனிதர்களின் மூளைகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங்க் செய்து சோதிக்கப்பட்டன. 45 வயதுக்கு மேல் உள்ள 672 நபர்களின் மூளைகள் இந்த வகைமைக்குக் கீழ் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங்க் செய்யப்பட்டது. இந்த நபர்களின் நடத்தை குறித்த தகவல்கள் அவர்களுடைய பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்டன. அவர்களுடைய முளைகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டது. குழந்தை பருவத்தில் இருந்து குற்றச் செயல்
களில் ஈடுபட்டவர்களின் மூளை மற்றவர்களைக் காட்டிலும் சிறியதாக இருப்பது இதில் கண்டுபிடிக்கப்பட்டது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்