மொழிபெயர்ப்பு: ஒடிசாவில் பாடத் திட்டத்தில் சாலை பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

Odisha to include road safety in school curriculum

Bhubaneswar,

The Odisha government has decided to include road safety in the school curriculum from the academic session 2020-21 for class 10 students, an official said.
Odisha is among the top four states in the country where the maximum road accident deaths take place due to drunken driving.

"The students of class 10 will be imparted education on road safety. It is up to the experts in the education department as to how they incorporate it in the syllabus - in the form of a subject or a special chapter," Transport Commissioner Sanjeeb Panda said.

The School and Mass Education department will prepare the syllabus. School and Mass Education Minister Samir Ranjan Dash said the syllabus for class 10 students for the 2020-21 academic year has already been prepared."We will find out on how to incorporate the road safety subject in it," Dash said on Thursday.

The transport commissioner said education on road safety will help students know and follow traffic rules. It would also create a culture among them with good attitudes and skills, Panda said.

Students will be educated on traffic signals, administering first aid after accidents, rules to be followed while riding a motorcycle and crossing a road, the importance of wearing helmets and seat belts and road safety laws.

- PTI

ஒடிசாவில் பாடத் திட்டத்தில் சாலை பாதுகாப்பு

பள்ளி பாடத் திட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பாடத்தை சேர்க்க ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2020 -21) முதல் இந்தப் பாடம் 10-ம் வகுப்பு புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் 4 மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இதுகுறித்து ஒடிசா போக்குவரத்துத் துறை ஆணையர் சன்ஜீப் பாண்டா கூறும் போது, ‘‘பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பாடம் கற்றுத் தரப்படும். இந்தப் பாடத்தை பாடத்திட்டத்தில் எப்படி சேர்ப்பது என்பது பற்றி கல்வித் துறை நிபுணர்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

இதுகுறித்து பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறை அமைச்சர் சமீர் ரஞ்சன்தாஸ் கூறும்போது, ‘‘சாலை பாதுகாப்பு குறித்த பாடம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. அதை 2020 - 21-ம் ஆண்டு பாடத் திட்டத்தில்எப்படி சேர்ப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

போக்குவரத்துத் துறை ஆணையர் கூறும்போது, ‘‘சாலை விதிமுறைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள, இந்தப் பாடம் உதவியாக இருக்கும். மேலும், மாணவர்கள் மத்தியில் நல்ல ஒழுக்கம், திறமை போன்ற கலாச்சாரத்தையும் இந்தப் பாடம் உருவாக்கும்’’ என்றார்.

புதிய பாடத்தில் சாலை சிக்னல்கள், விபத்துக்குப் பிறகு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி, இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சாலைகளை கடப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிகள், தலைக்கவசம் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியம், சாலை பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவை கற்றுத் தரப்படஉள்ளன.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்