மொழிபெயர்ப்பு: விரைவில் இந்தியாவின் முதல் நீர்மூழ்கி மெட்ரோ ரயில் சேவை

By செய்திப்பிரிவு

Kolkata metro: India's first underwater metro nears completion, to start soon

Kolkata

India's first underwater metro nears completion, to start soon Kolkata Metro Rail Corp. expects to complete its East-West project, which runs partly under the city’s iconic Hooghly river, by March 2022 after a delay of several years doubled costs.

The authority is awaiting a final installment of 200 million rupees ($2.8 million) over the next two years from the Indian Railway Board, said Manas Sarkar, managing director at KMRC. A soft loan of 41.6 billion rupees from Japan International Cooperation Agency helps fund 48.5% of the project.

India’s oldest metro, which started in 1984 with a North-South service, was due to expand by 2014 but faced problems including squatters on the planned route. These issues have contributed to the total project cost rising to about 86 billion rupees for some 17 kilometers from 49 billion rupees for 14 km.

“About 40% of total transport demand will be tackled by these two metro services. It will be a relief for environmental pollution and the city should be much more decongested" Sarkar said.

The new line is expected to carry about 900,000 people daily, roughly 20% of the city’s population and will take less than a minute to cross a 520-meter underwater tunnel.

விரைவில் இந்தியாவின் முதல் நீர்மூழ்கி மெட்ரோ ரயில் சேவை

ஹூக்ளி நதிக்குள் பாய்ந்து செல்லும் மெட்ரோ ரயில் திட்டத்தை 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்க விருப்பதாக கொல்கத்தா மெட்ரோ ரயில் துறை அறிவித்துள்ளது. கிழக்கு-மேற்கு திட்டம் என்றழைக்கப்படும் இந்த ரயில் திட்டம் ஏற்கெனவே காலம் தாழ்த்தப்பட்டிருப்பதாகவும் முன்பு திட்டமிட்டதைவிடவும் இருமடங்கு செலவில் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இத்திட்டத்துக்கு இந்திய ரயில்வே வாரியம் தருவதாக ஒப்புக்கொண்ட கடைசி தவணையான 20 கோடி ரூபாய் கிடைத்துவிட்டால் இன்னும் இரண்டாண்டுகளில் நீர்மூழ்கி மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கிவிடும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் மாநகராட்சி நிர்வாக இயக்குநர் மானஸ் சர்கார் தெரிவித்தார். இத்திட்டத்துக்கென ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 160 கோடி ரூபாய் நீண்ட காலத்துக்குத் திருப்பி செலுத்தும் வகையிலான எளிய கடனாக (soft loan) பெறப்பட்டுள்ளது.

அத்தொகையை கொண்டுதான் 48.5 சதவீதம் நீர்மூழ்கி மெட்ரோ ரயில் திட்டம் இதுவரை முடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டத்தை 1984-ம் ஆண்டில் கொல்கத்தா தொடங்கியது. 2014-ம் ஆண்டில் விரிவடையத் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் இத்திட்டம் பின்னடைவை சந்தித்தது. இதனால் மொத்தம் 4900 கோடி ரூபாய் செலவில் 14 கி.மீ.
நீளத்துக்கு திட்டமிடப்பட்டது பிறகு 8600 கோடி ரூபாய் செலவில் 17 கி.மீ. நீள திட்டமாக மாறிப்போனது.

“வழக்கமான மெட்ரோ ரயில் சேவை மற்றும் நீர்மூழ்கி மெட்ரோ ரயில் சேவை மூலமாக கொல்கத்தாவின் 40 சதவீத போக்குவரத்து தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு இத்திட்டம் தீர்வாக அமையும். மேலும் நகர நெரிசலையும் மட்டுப்படுத்த உதவும்” என்று சர்கார் தெரிவித்தார். இந்த புதிய ரயில் சேவை மூலம் நாள்தோறும் 9 லட்சம் பொதுமக்கள் பயணம் செல்ல முடியும்.

ஒரு நிமிடத்துக்கும் குறைவான கால அவகாசத்தில் கொல்கத்தாவின் 20 சதவீத மக்களை 520 மீட்டர் தொலைவுவரை நீர் மூழ்கி மெட்ரோ ரயில் கொண்டு செல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்