அறிந்ததும் அறியாததும்: 4 விஷயங்களை தெரிஞ்சிக்குவோமா!

By செய்திப்பிரிவு

பெயர்ச்சொல்லையும் வாக்கியத்தில் உள்ள பிற சொற்களையும் இணைக்கும் Prepositions பற்றி பேச ஆரம்பித்தோம் நினைவிருக்கிறதா மாணவர்களே! வாருங்கள், அடிக்கடி பயன்படுத்தப்படும் Prepositions-களை முதலில் தெரிந்து கொள்வோம்.

About, Above, Across, After, Against, Along, Amid, Around, As, Alongside, According to, Before, Behind, Below, Beneath, Between, Beside, Beyond, But, By, Because of, Concerning, Despite, down, During, Except, Under, Underneath, Unlike, Of, Off, On, Onto, out, Since இன்னும் பல இருக்கின்றன என்றால் மலைப்பாக இருக்கிறதா?

பயப்பட தேவை இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இவை அனைத்துமே மிக எளிய வாக்கிய அமைப்புகளில் நாம் பயன்படுத்தும் சொற்களே என்பது புரியும். ஆனால், எங்கே, எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் குழப்பம் வந்துவிடுகிறது. அதை இனி சுலபமாக சரி செய்துவிடலாம் கவலையை விடுங்கள். Prepositions நமக்கு நான்கு விஷயங்களை உணர்த்துகின்றன.

அவை:

1. இடம்: குறிப்பிட்ட சம்பவம் எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக்
காட்டுபவை Prepositions.
2. நேரம்: எந்த காலகட்டத்தை வாக்
கியம் சுட்டிக்காட்டுகிறது என்பதையும் Prepositions உணர்த்தும்.
3. திசை அல்லது எதை நோக்கி: நப
ரோ, விலங்கோ அல்லது பொருளோ
எதை நோக்கி, எந்த திசையில் செல்
கின்றன என்பதை குறிப்பதும் Prepositions தாம்.
4. தொடர்பு: பெயர்ச்சொல்லுக்கும் வாக்கியத்தில் உள்ள மற்ற சொல்
லுக்கும் இடையிலான தொடர்பை காட்டுபவை Prepositions.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE