மொழிபெயர்ப்பு - அறிவியல் வளர்ச்சிக்கு கருத்துச் சுதந்திரம் முக்கியம்: நோபல் பரிசு புகழ் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

Science flourishes when there is freedom of thought, says Nobel laureate Venkatraman Ramakrishnan

Bangalore

“Science flourishes when there is freedom of speech of thought,” said Nobel prize winner Venkataraman “Venki” Ramakrishnan, adding that “It will prosper when there is minimal interference by the government.”

In “Science and Society” event at Bangalore International Centre on Wednesday, he said, “I personally believe that science flourishes where there is a real freedom of thought, opinion and minimal ideological interference. Although the autonomy of science remains an open question.”

On the question of the sanctity of science in times of volatility in the world, in context of Hitler’s Germany and Soviet Union regime, he said, “Nazis practically destroyed German science and it took 50 years for the country to recover. As a result of the Soviet Union government’s opposition to genetics, Soviet biology lagged behind by several decades.”

But by citing the example of China, Ramakrishnan said “It was an exception as the country is making great advances in science despite curbs
on freedom of speech and opinion.”

Rueing the fact that India has failed to develop sufficient scientific temperament and has not done enough in the research field despite perhaps being the only country with a Constitution that stresses on the need to, he said, “Oddly, India’s spending in terms of GDP on science and technology is quite less. The country’s goals and actions are not clearly aligned.” he said.

The Government doesn't know how to go forward with this, “No one has the knowledge about working on the priorities except for scientists in the field. Separation between the government, and the actual science,science infrastructure and establishment is quite important” the scientist said.

அறிவியல் வளர்ச்சிக்கு கருத்துச் சுதந்திரம் முக்கியம்: நோபல் பரிசு புகழ் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

“கருத்துச் சுதந்திரம் இருந்தால் மட்டுமே அறிவியல் வளர்ச்சி நடைபெறும். அதிலும் அரசாங்கத்தின் தலையீடு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்தளவுக்கு அறிவியல் துறை வளம்பெறும்” என்று நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெங்களூரு சர்வதேச மையத்தில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற ‘அறிவியல் மற்றும் சமூகம்’ நிகழ்ச்சியில் பேசினார்.

ஜெர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகாரம் தலைதூக்கிய காலத்திலும் சோவியத் ஒன்றியத்தில் எதேச்சதிகாரம் கோலோச்சிய காலத்திலும் அறிவியலின் புனிதத்தன்மை என்னவானது என்ற கேள்வி நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் “ஜெர்மனியின் அறிவியலை நாஜிக்கள் நிர்மூலமாக்கினார்கள்.

அதிலிருந்து அந்நாடு மீண்டெழ 50 ஆண்டுகளுக்கும் மேலானது. மரபணு ஆராய்ச்சிக்குச் சோவியத் ஒன்றிய அரசு விதித்த தடையினால் சோவியத் நாட்டின் உயிரியல் துறை பல தசாப்தங்கள் பின்தங்கிவிட்டது. இதில் விதிவிலக்கு சீனா எனலாம். அங்கு எவ்வளவுதான் கருத்துத்துரிமையும் பேச்சுரிமையும் ஒடுக்கப்பட்டாலும் அவர்கள் அறிவியலில் முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள்.”

அறிவியல் நோக்கில் நாட்டைகொண்டு செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இருப்பினும் அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்க்கவும் ஆராய்ச்சித் துறையில் போதுமான அளவுக்கு பங்களிப்பு செய்யவும் இந்தியா தவறிவிட்டதாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்தார். “ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த சதவீதமே அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஒதுக்கப்படுகிறது. நாட்டின் குறிக்கோளும் செயல்பாடும் தெளிவாக இல்லை. அறிவியலை அடுத்தகட்டத்துக்கு எப்படிக் கொண்டு செல்வதென்று அரசுக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் அறிவியலில் எதை முதன்மைப்படுத்துவது என்ற அறிவு அறிவியலாளர்களை தவிர வேறு யாருக்கும் கிடையாது. இந்நிலையில் அறிவியல், அறிவியல் உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் நிறுவனங்களில் தலையிடாமல் அரசு விலகி நிற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்