மொழிபெயர்ப்பு: சமூக ஊடகத்தில் ட்ராலிங் செய்பவர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்

By செய்திப்பிரிவு

New AI algorithms can spot online trolls: Study

Los Angeles,

New artificial intelligence (AI) algorithms can monitor online social media conversations as they evolve, which could lead to an effective and automated way to spot online trolling in the future, according to researchers, including those of Indian-origin.
Prevention of online harassment requires rapid detection of offensive, harassing, and negative social media posts, which in turn requires monitoring online interactions.

Current methods to obtain such social media data are either fully automated, and not interpretable or rely on a static set of keywords, which can quickly become outdated. Neither method is very effective, according to Maya Srikanth, from California Institute of Technology (Caltech) in the US.
"It isn't scalable to have humans try to do this work by hand, and those humans are potentially biased," Srikanth said.

"On the other hand, keyword searching suffers from the speed at which online conversations evolve. New terms crop upand old terms change meaning, so a keyword that was used sincerely one day might be meant sarcastically the next," she said.

The research team used GloVe (Global Vectors for Word Representation) model that uses machine-learning algorithms to discover new and relevant keywords. Machine learning is an application of AI that provides systems the ability to automatically learn and improve from experience without being explicitly programmed.

This approach gives researchers a dynamic and ever-evolving keyword set to search. However, it is not enough just to know whether a certain conversation is related to the topic of interest; context matters, the researchers said. In Twitter posts about the #MeToo movement, the word "female" was more likely to be associated with the terms "desire," and "victims."

-PTI

சமூக ஊடகத்தில் ட்ராலிங் செய்பவர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்

லாஸ் ஏஞ்சல்ஸ்

சமூக ஊடகங்களில் பிறரை பின்தொடர்ந்து துன்புறுத்தும் (ட்ராலிங்) வேலையைச் செய்பவர்களை கண்டுபிடிக்கக் கூடிய புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைநுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் இது. இணையத்தில் சமூக நலனுக்கு எதிரான கருத்துகளை பதிவிடுதல், சமூக ஊடகங்களில் வன்கொடுமை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த ஆன்லைன் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.

தற்போது உள்ள சமூக ஊடக தகவல்கள் யாவும் முழுவதுமாக தானியங்கி முறைப்படி இயக்கப்படுகின்றன. அல்லது குறிப்பிட்ட சிறப்புச் சொற்களை அடிப்படையாக வைத்து மட்டுமே கண்காணிப்புவேலை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த இரண்டு வழிமுறைகளால் பெரிய பலனில்லை என்றுஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாயா ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

மேலும் இது குறித்து பேசுகையில், “இவ்வளவு பெரிய பணியை மனிதர்களைக் கொண்டு செய்வது நிதர்சனத்தில் முடியாத காரியம். அதுமட்டுமின்றி மனிதர்கள் அடிப்படையிலேயே பாரபட்சம் பார்க்கக்கூடியவர்கள். இதுபோக இணையத்தில் அதிவேகமாக உரையாடல்கள் நடைபெறுவதால் அங்கு சிறப்புச் சொற்களை வைத்து தொல்லைத் தருபவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.

இந்த ஊடகத்தில் நாள்தோறும் சொற்களுக்கான உட்பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் தாழ்மையுடன் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாடல் அடுத்த நாள்பகடிக்கான சொல்லாக மாறிவிடுகிறது” என்கிறார் மாயா
ஸ்ரீகாந்த்.

இந்நிலையில், புதிய ஆராய்ச்சியைநடத்தியுள்ள குழுவானது இயந்திரகற்றல் முறையை அடிப்படையாக வைத்து சமூக ஊடகங்களில் புழக்கத்தில் இருக்கும் சிறப்புச் சொற்களைக் கண்டுபிடித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவுதான் இயந்திர கற்றலாகும். கணினி நிரல் ஏதுமின்றியும் இந்த தொழில்
நுட்பமானது அனுபவத்தின் வழியாகத் தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும்.

உதாரணத்துக்கு, ‘பெண்’ என்றசொல் ‘#மீ டூ’ இயக்கத்துக்கான ட்விட்டர் பதிவுகளில் எழுதப்படும்போது ’ஆசை’, ‘பாதிக்கப்பட்டவர்’ ஆகிய சொற்களோடு தொடர் புடையதாக அச்சொல் இடம்பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்