ஜி.எஸ்.எஸ்.
அன்று பள்ளிக்கு முன்னதாகவே வந்து விட்டார்கள் கேசவனும், குமரனும். அவர்களுக்கிடையே அப்போது நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.
Kesavan – It is very hot.
Kumaran – Yes. And the fan is not rounding.
Kesavan – It is rounding but it is running very slowly.
Kumaran – Shall we stop the fan?
Kesavan – Yes. We are not getting any wind because of this fan.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
மின்விசிறி சுற்றுவதைக் குறிக்க rounding என்ற சொல்லை குமரன் பயன்படுத்துகிறான். Running என்ற சொல்லை கேசவன் பயன்படுத்துகிறான். இரண்டுமே தவறு.
The fan is rotating slowly என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும். மின்விசிறியின் இயக்கத்தை நிறுத்த stop the fan ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறான் குமரன். அது தவறு. switch off the fan என்பதே சரியான பயன்பாடு.
We are not getting any wind because of this fan என்கிறான் கேசவன். அவன் கூற விரும்புவது மின்விசிறியின் மூலம் காற்று கிடைக்கவில்லை என்பதுதான்.
ஆனால், இந்த வாக்கியத்தைப் படித்தால் ஏதோ காற்று வருவதை மின்விசிறி தடுத்துக் கொண்டிருப்பதைப்போல உள்ளது. தவிர, wind என்பது தானாகவே அசைந்து வரும் காற்றைத்தான் குறிக்கும். மின்விசிறியின் மூலம் கிடைப்பதை air என்றுதான் குறிப்பிடுவோம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago