மொழிபெயர்ப்பு: ஐக்கிய அரபு நாட்டில் தமிழக மாணவர் சாதனை - அபாரமான நினைவாற்றல் படைத்த ஆட்டிச இளைஞர்

By செய்திப்பிரிவு

Autistic Indian student in UAE achieves dreams with exceptional memory

Dubai,

A 19-year-old autistic Indian in the UAE, who was deemed unfit for normal school, has brought accolades with his exceptional memory power, a media report said on Sunday.Rohithparithi Ramakrishnan, who hails from Tamil Nadu, can tell the day of any past or future date in a matter of seconds, Khaleej Times reported.

Born weighing about 1 kg, Ramakrishnan was kept in an incubator for months and underwent multiple surgeries. He was diagnosed as autistic before turning two years, the report said.
"He is a miracle baby. He was deemed unfit for normal school as he was hyperactive. Our doctor suggested putting him in special schools," Malini, the mother of Ramakrishnan, was quoted as saying.

However, later the parents of Ramakrishnan realised that he had unique talents."He used to hum songs that he listened on TV. He never committed mistakes in mathematics," Malini said.

In 2018, Ramakrishnan cleared Class 10 exam held by National Institute of Open Schooling under the Indian government.
To check his memory power, Ramakrishnan was asked 10 such posers of years and dates, to which he replied all correctly, the paper reported.
Ramakrishnan has also won electronic keyboard competitions held by various groups and associations and, that too, in general category.

- PTI

ஐக்கிய அரபு நாட்டில் தமிழக மாணவர் சாதனை: அபாரமான நினைவாற்றல் படைத்த ஆட்டிச இளைஞர்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் வசித்து வரும் தமிழக மாணவர் (19) சாதனை படைத்துள்ளார். ஆட்டிசம் குறைபாடு உள்ளதால் மற்ற குழந்தைகளைப் போல வழக்கமான பள்ளியில் படிக்க தகுதியற்றவர் என்று பால்ய பருவத்தில் முத்திரை குத்தப்பட்டவர் ரோஹித் பரிதி ராமகிருஷ்ணன். தற்போது தன்னுடைய அபாரமான நினைவாற்றல் திறனால் பெரிதும் பாராட்டப்பட்டுவருகிறார்.

ரோஹித் பரிதி ராமகிருஷ்ணனால் கேட்ட மாத்திரத்தில் கடந்தகால மற்றும் எதிர்கால தேதிகளை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்று ’கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிறந்த போது ரோஹித் பரிதி ராமகிருஷ்ணனின் உடல் எடை வெறும் 1 கிலோ. இதனால் மாதக்கணக்கில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டு பல அறுவை சிகிச்சைக்குப் பிறகே அவர் உயிர்ப்பிழைத்தார். இரண்டு வயது குழந்தையாக இருந்த போது அவருக்கு ஆட்டிசம் குறைப்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரோஹித் பரிதி ராமகிருஷ்ணனைப் பற்றி அவருடைய தாய் மாலினி கூறுகையில், “அவன் ஓர் அபூர்வக் குழந்தை. இயற்கையை மீறிய சுறுசுறுப்புடன் காணப்பட்டதால் அவனை வழக்கமான பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது என்றார்கள். அவனை சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி எங்களுடைய மருத்துவர் பரிந்துரைத்தார். டிவியில் எந்த பாடலை கேட்டாலும் ரீங்காரமிடுவான். அதேபோல கணித பாடத்தில் ஒருமுறைகூட தவறிழைத்ததில்லை ” இவ்வாறு ரோஹித்பரிதி ராமகிருஷ்ணனின் தாய் மாலினி தெரிவித்தார்.

இந்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளி முறையின்கீழ் 2018-ம் ஆண்டில் 10-ம் வகுப்புத் தேர்வில் ரோஹித்பரிதி ராமகிருஷ்ணன் தேர்ச்சி அடைந்தார். அவருடைய நினைவாற்றலை சோதிக்கும் விதமாக ஆண்டுகள் மற்றும் தேதிகள் தொடர்பான 10 கேள்விகள் கேட்கப்பட்ட போது அத்தனைக்கும் சரியாகப் பதிலளித்தார். இதுபோக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட கீபோர்டு இசை கருவி போட்டிகள் பலவற்றில் அவர் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்