அறிந்ததும் அறியாததும்: ஒட்டவைக்கும் சொல்!

By செய்திப்பிரிவு

இரு வேறு வாக்கியங்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துபவை ‘linker words’ எனப்படும் இணைப்புச் சொற்கள். இவற்றில் சிலவற்றைப் பற்றி நேற்று பேசினோம். இன்று மேலும் சில இணைப்புச் சொற்களை தெரிந்து கொள்வோமா!

Nevertheless (இருப்பினும்)

உதாரணத்துக்கு,

I had fever so I didn’t want to get up in the morning. Nevertheless, I went to school as usual.

எனக்கு காய்ச்சல் வந்ததால் காலையில் எழுந்திருக்க வேண்டாம் என்று நினைத்தேன். இருப்பினும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றேன்.

Yet (இதுவரையிலும்)

உதாரணத்துக்கு,

I’ve asked you repeatedly to write legibly in your notebook. Yet, you keep scribbling.

நோட்டுப் புத்தகத்தில் திருத்தமாக எழுதும்படிஉன்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், இதுவரையிலும் நீங்கள் கிறுக்கிக்கொண்டுதான் இருக்கிறாய். இதுபோன்று மேலும் பல இணைப்பு சொற்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

On the other hand (மறுபுறம்)

உதாரணத்துக்கு,

England has the best language schools. On the other hand, it has the worst weather. இங்கிலாந்தில் மிகச் சிறந்த மொழி பள்ளிகள் உள்ளன. மறுபுறம் அங்கு மிக மோசமான வானிலை உள்ளது.

By Comparison (அதனுடன் ஒப்பிட்டால்)

உதாரணத்துக்கு,

Solving crossword puzzles is very difficult. By comparison, creating crossword puzzles is easier I would say.

குறுக்கெழுத்து புதிர்களுக்கு விடை கண்டறிவது கடினம். அதனுடன் ஒப்பிடுகையில், குறுக்கெழுத்து புதிர்களை உருவாக்குவதே எளிது என்பேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்